Wednesday, July 21, 2010

கள்ளர் வரலாற்றுச் சுருக்கம் ---- 2

உலக மக்கள் தொகையில் சுமார் ஒரு கோடி கள்ளர்கள் தற்போது உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து தென்தமிழகம் வரை அதாவது தென் ஆற்காடு ஒருங்கிணைந்த தஞ்சை, திருச்சி, ஒருங்கிணைந்த மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பரவலாகவும் மற்ற இடங்களில் மிகமிக குறைந்தும் வாழ்கின்றனர்.

                               இக்குடியினருக்கு வழங்கும் பட்டப் பெயர்களை நோக்கும் போது உலக இனங்களில் எந்த இனத்திற்கும் இல்லாத அளவில ஆயிரக்கணக்கான பட்டப்பெயர்களை அவர்கள் தாங்கி இருக்கின்றனர், இவர்களது வாழ்க்கை எவ்வளவு உயர்வாகவும், எத்துனை மிகு சிறப்பு உடையவர்களாகவும் வாழ்ந்து, வரலாறு படைத்திருக்கின்றார்கள், என்று நோக்கும் போது யாரும் வியக்காதிருக்க முடியாது. இவர்களது வரலாற்றை முழுமையாக ஆராய்ந்தால் தமிழகத்தின் வரலாற்றில் மறைந்து இருக்கும் பல புதிர்களுக்கு விடை கிடைக்கலாம்.



                       கள்ளர்களுக்கு எம்முறையில் இப்பெயர் வழங்கப்படுகிறது என்று சிறிது காண்போம்.

“கள்வனென் கிளவி கரியோனென்ப” – திவாகரம்

“கடகரிப்பெயரும், கருநிறமகனும், கற்க்கடக விராசியும்
ஞெண்டும் கள்வனென்” – பிங்களந்தை


எனவே கள்வன் எனும் சொல் கருநிறம் உடையோன் என்ற பொருளில் வழங்கி வந்துள்ளது. ஆரியரின் இருக்குவேத மந்திரங்கள் தமிழரைக் கரியோர், பகைவர் என்று கூறுகின்றன. இந்திரன் கரியோன் எனப் பெயர் பெற்றவனாவான் அது பற்றியே கள்ளர்கள் தங்களை இந்திர குலத்தார் என்று கூறி வருகின்றனர். சோழர்களை கருநிறம் பற்றியே மால் என்று அழைக்கின்றனர்.

No comments: