Friday, July 23, 2010

கள்ளர் வரலாற்றுச் சுருக்கம் ---- 3

கள்ளர் வரலாற்றுச் சுருக்கம் ---- 3

                               கள்வர் - பகைவர், பிறர்பொருளை வௌ;வுவோர் என்று பொருள் கூறப்படுகிறது. பகைவர்கள் என்றால் அவர்கள் யாருக்குப் பகைவர்கள் என்று நோக்கும் போது தமிழ்ப் பகைவர்கள் அனைவர்க்கும் பகைவர்களார் பிறர் பொருளை வௌ;வுதல் அல்லது கவருதல் என்றால் எந்த இன மக்கள் மற்றவர் பொருளை கவராமல் இருப்பவர் என்று நோக்கும் போது கள்வர் என்பதற்கு உண்மையான வேறு பொருள் இருத்தல் வேண்டும் அதனையும் ஈண்டு காண்போம்.

                                       சீவக சிந்தாமணி 741ம் செய்யுளில் உள்ள

“ கள்ளராற் புலியை வேறுகாணிய” என்ற

தொடருக்க அரசனைக் கொண்டு சீவகனை போர் காண வேண்டி என்று பொருள் கண்டார் உச்சிமேற் புலவர் நச்சினார்கினியர் இங்கே கள்ளர் என்பதற்கு அரசர் என பொருள் கண்டார். சீவகனைப் புலி என்று கூறியதற்கு ஏற்ப அரசரைக் கள்ளர் என்றார் எனின் இங்கு வீரத்தின் மேம்பட்டார் என்று பொருள் படுகிறது. எனவே வீரம் எனும் பொருள் பற்றியே கள்வர், கள்ளர் என்ற பெயர்கள் தோன்றியதாகத் தெரிகிறது.

                              இச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் நாட்டுத்தலைவர்களாகவும், வேளிர்களாகவும், முடிவேந்தர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், பிற்றை நாட்களில் சமீன்தார்களாகவும், பெருநில உடைமையாளராகவும் வாழ்ந்து வந்துள்ளனர். கள்ளர்கள் தொன்று தொட்டு ஆட்சி இனமாக இருந்த காரணத்தால் இன்றும் அவர்கள் வாழும் பகுதிகள் நாடுகாளாக பகுக்கப்பட்டு அதன் தலைமைப் பொறுப்பை கள்ளர் இனத்தவர்களே வகித்து வருகின்றனர் தஞ்சை, மதுரை பகுதிகளில் இன்றும் பல நாடுகளும் நாட்டுக் கூட்டங்களும் நடைபெறுவதைக் காணலாம்.

                குறிப்பாகப் பல இடங்களில் மற்ற சமுதாய மக்கள் பரவலாகவும், கள்ளர் இன மக்கள் சிறுபான்மையாகவும் உள்ள இடங்கிலும் அப்பகுதியி;ன் தலைமையை இவ்வினத்தார் ஏற்று செயல் பட்டு வருவதில் இருந்து அன்னாரது சிறப்பு உணரற்பாலதாகும். பல இடங்களில் மற்ற சமுதாய மக்கள் இவர்களை உரிமையுடன் “எங்கள் கள்ளர் எங்கள் கள்ளர்” என்று அழைப்பதை நோக்கும் போது இவர்கள் அச்சமுதாய மக்களுக்கு பல்லாற்றானும் உறுதுணையாய் இருந்து காத்து வருவது புலப்படும் எனவே இங்கு கள்ளர் என்ற சொல் தலைவர் என்ற பொருளில் வழங்கப்படுவது நோக்கத் தக்கதாகும்.

                    எனவே கள்ளர், கள்வர் சொற்கள் உயரிய பொருளைத் தருவதை நோக்க தலைவர், அரசர், கரியவர், உளம்கவர் பண்பாளர் என்று பொருள் கொள்ளலாம். இவ்வளவு சிறப்புப் பொருள் இருக்கும் போது வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்பு பெற்ற ஒரு சமுதாயம் இழிபொருள் தரும் பெயரைத் தங்கள் குலப்பெயராக ஏற்பரா? ஏன்று சிந்தித்தால் அவர்களுக்கும் கள்ளர் என்ற சொல் மேற்கண்ட உயர் பொருளிலேயே வழங்கி இருத்தல் வேண்டும். மேலும் அவர்கள் எந்த தொல்குடியை சேர்ந்தவர்கள் என்பதைக் காண்போம்.

Wednesday, July 21, 2010

கள்ளர் வரலாற்றுச் சுருக்கம் ---- 2

உலக மக்கள் தொகையில் சுமார் ஒரு கோடி கள்ளர்கள் தற்போது உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து தென்தமிழகம் வரை அதாவது தென் ஆற்காடு ஒருங்கிணைந்த தஞ்சை, திருச்சி, ஒருங்கிணைந்த மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பரவலாகவும் மற்ற இடங்களில் மிகமிக குறைந்தும் வாழ்கின்றனர்.

                               இக்குடியினருக்கு வழங்கும் பட்டப் பெயர்களை நோக்கும் போது உலக இனங்களில் எந்த இனத்திற்கும் இல்லாத அளவில ஆயிரக்கணக்கான பட்டப்பெயர்களை அவர்கள் தாங்கி இருக்கின்றனர், இவர்களது வாழ்க்கை எவ்வளவு உயர்வாகவும், எத்துனை மிகு சிறப்பு உடையவர்களாகவும் வாழ்ந்து, வரலாறு படைத்திருக்கின்றார்கள், என்று நோக்கும் போது யாரும் வியக்காதிருக்க முடியாது. இவர்களது வரலாற்றை முழுமையாக ஆராய்ந்தால் தமிழகத்தின் வரலாற்றில் மறைந்து இருக்கும் பல புதிர்களுக்கு விடை கிடைக்கலாம்.



                       கள்ளர்களுக்கு எம்முறையில் இப்பெயர் வழங்கப்படுகிறது என்று சிறிது காண்போம்.

“கள்வனென் கிளவி கரியோனென்ப” – திவாகரம்

“கடகரிப்பெயரும், கருநிறமகனும், கற்க்கடக விராசியும்
ஞெண்டும் கள்வனென்” – பிங்களந்தை


எனவே கள்வன் எனும் சொல் கருநிறம் உடையோன் என்ற பொருளில் வழங்கி வந்துள்ளது. ஆரியரின் இருக்குவேத மந்திரங்கள் தமிழரைக் கரியோர், பகைவர் என்று கூறுகின்றன. இந்திரன் கரியோன் எனப் பெயர் பெற்றவனாவான் அது பற்றியே கள்ளர்கள் தங்களை இந்திர குலத்தார் என்று கூறி வருகின்றனர். சோழர்களை கருநிறம் பற்றியே மால் என்று அழைக்கின்றனர்.

KALLAR HISTORY

கள்ளர் வரலாற்றுச் சுருக்கம் ---- 1

-------------------அள்ளுர்கிழான் சாமிகரிகாலன்

                          தமிழகத்தின் தொல் முதுகுடியைச் சேர்ந்தவர்கள் கள்ளர்கள் ஆவார். இவர்களைப் பற்றி பல அறிஞர்கள் பலவாறான கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
                         முடியுடை மூவேந்தருள் சோழர்கள் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று பர்னலும், வெங்காசாமி ராவ் அவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.                          மு. சீனுவாச அய்யங்கார் சோழரை சாதியில் கள்ளர் என்றும் பாண்டியரை மறவர் என்றும் குறிப்பார்.
                          வின்சன் ஸ்மித் எனும் வரலாற்று அறிஞர் கள்ளரையும், பல்லவரையும் இணைத்துக் கூறுவார்.
                          சர்.வால்டர் எலியட் கள்ளர்கள்களை கலகத் கூட்டத்தார் என்றும் அவர்கள் ஆண்மை, அஞ்சாமை, வீரம் முதலிய பண்பு மிக்கவர்கள் என்பார். 
                      

கள்ளர்கள் நாகர் இனத்தவர் என்று அறிஞர் வி. னகசபை பிள்ளை அவர்களும் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும் கூறுவர்.


                      ள்ளர்கள் தமிழகத்தின் வீரமிக்க தனித்தமிழ்த் தொல் குடியினர் என்று மொழி ஞாயிறு பாவாணர் கூறுவார்.

"கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு
முன்தோன்றி மூத்த குடியினர் "

என்று வழக்கறிஞர் சுந்தரராசன் கூறுவார்.

மேலும் கல்லில் தோன்றியதால் கல்லர் என்று குறிப்பதே சிறப்பு என்பார் தமது தரணியாண்ட தமிழ் வள்ளல்கள் என்ற நூலில்.
                      இவ்வாறாக பலபடி போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் இலக்கான இக்குடியினரைப் பற்றி நாம் சிறிது அறிந்து கொள்வது நலமாகும்.